ரசிகர்கள் சந்தோஷம்தான் முக்கியம்: “சவாலான வேடங்களில் நடிப்பேன்” -நமீதா
Friday, 03 July 2009 12:27
minaa
நமீதா கதாநாயகியாக நடித்த ஜகன் மோகினி, இந்திர விழா படங்கள் ரிலீசுக்கு தயாராகின்றன. தற்போது அழகான பொண்ணுதான் என்ற படத்தில் நடிக்கிறார். இதில் சேலை உடுத்தி குடும்ப பாங்கான வேடத்தில் வருகிறார் என்பது சிறப்பு அம்சம். கவர்ச்சியின் எல்லை வரை தொட்டுவிட்டதால் மாறுதலுக்காக இவ்வேடத்தை செய்கிறார் என்கின்றனர்.
நமீதா சொல்கிறார்:- படங்களில் என்னை தொடர்ச்சியாக காணமுடியவில்லை என்று சிலர் குறைபட்டனர். சிறுசிறு வேடங்களை ஏற்காமல் கதாநாயகியாக சில படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் இந்த இடைவெளி ஏற்பட்டு உள்ளது. இந்திரவிழா, ஜகன் மோகினி படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன. இப்படங்கள் எனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதாக அமையும் இந்திரா விழா படத்தில் வித்தியாசமான வேடம் ஏற்றுள்ளேன். இப்படத்தை விளம்பர படத்துவதற்காக புது மாதிரி முயற்சி செய்கிறோம். 2 லட்சம் ரசிகர்களுக்கு இமெயில் அனுப்பி இந்திரவிழா படத்தை விளம்பரம் செய்தேன். அதற்கு பலன் கிடைத்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பதில் அனுப்பினார்கள். ஜகன் மோகினி ஏற்கனவே வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம். அப்படத்தின் ரீமேக்கில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பழைய கதையை அப்படியே படமாக்கவில்லை. திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்துள்ளோம். கவர்ச்சி, காமெடி,சென்டிமென்ட் என ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும். ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதுதான் முக்கியம் அவர்கள் என்னை எப்படி எதிர்பார்க்கிறார்களோ அது மாதிரி நடிப்பேன். விருதை குறிவைக்கும் சவாலான வேடங்களிலும் நிச்சயம் நடிப்பேன். 
Last Updated on Friday, 03 July 2009 17:25
|
நீச்சல் உடையில் நடிப்பது தப்பில்லை- ஸ்ருதி கமலஹாசன் பேட்டி
Friday, 03 July 2009 12:20
minaa
பாடகி, மாடல் அழகி, நடிகை, இசையமைப்பாளர் என பல முகம் காட்டுகிறார் ஸ்ருதி கமலஹாசன். தந்தை நடிப்பில் உருவாகும் “உன்னை போல் ஒருவன்” படத்திற்கு இசையமைக்கும் இவர் தற்போது இந்தியில் “லக்” என்ற படத்தில் நடித்து வருகிறார். 75 சதவீத பணிகள் முடிந்துவிட்ட இந்த படம் அடுத்த மாத கடைசியில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் நீச்சல் மற்றும் முத்தக் காட்சிகளில் எந்த தயக்கமும் இன்றி நடித்துள்ளார் ஸ்ருதி.இதுகுறித்து அவர் கூறியதாவது:- நீச்சல் உடை காட்சிகளை நான் வரவேற்கிறேன். இது தவறு இல்லை. நீச்சல் உடையில்தான் ஒரு பெண் தனது உடல் அழகை முழுமையாக வெளிப்படுத்த முடியும். “லக்” படத்தில் நான் நீச்சல், முத்தக் காட்சியில் நடித்துள்ளேன். ரொமான்ஸ் காட்சிகளை படமாக்கும்போது அப்பா செட்டில் இருப்பதை நான் விரும்பவில்லை. அவர் பக்கத்தில இல்லாதபோது நீச்சல் காட்சிகளில் நடிக்க எனக்கு எந்த தயக்கம் இல்லை. “லக்” படத்தின் காட்சிகளை இதுவரை அப்பாவிடம் காட்டவில்லை. முழுவதும் எடுத்து முடித்த பிறகு தான் படத்தை போட்டு காட்டுவேன். உன்னை போல் ஒருவன் படத்தில் நான் இசையமைப்பாளராக மட்டும் தான் பணியாற்றுகிறேன். இப்படத்தின் இசையில் பல ஆச்சரியங்கள் நிச்சயம் இருக்கும். என் வேலையில் அப்பா குறுக்கிடுவதில்லை. காரணம் அதை நான் விரும்புவதில்லை. 
Last Updated on Friday, 03 July 2009 17:23
வரலட்சுமி சரத்குமாரின் மம்மா மியா நாளை அரங்கேற்றம்
Friday, 03 July 2009 12:06
minaa
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரின் தயாரிப்பில் உருவாகியுள்ள மம்மா மியா இசை நிகழ்ச்சி நாளை சென்னையில் அரங்கேறுகிறது.
இது நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியாகும். வரலட்சுமி சரத்குமார் தயாரிக்க மித்ரன் தேவநேசன் இயக்க, டிம்மோத்தி மதுகர் இசையமைக்க உருவாகியுள்ளது மம்மா மியா.
கிரேக் தீவான காலிகோஸில் வசிக்கும் டோனா மற்றும் அவரது மகள் சோபி குறித்த கதைதான் மம்மா மியா. சோபிக்கு கல்யாணம் நிச்சயமாகியுள்ளது. இந்த நிலையில், தனது தந்தை யார் என்பதை அறிய ஆவலாக உள்ளாள் சோபி. இதையடுத்து தனது தந்தையாக இருக்கக் கூடியவர்கள் என கருதும் 3 பேருக்கு அழைப்பு விடுக்கிறாள். அதன் பிறகு ஏற்படும் குழப்பம்தான் கதை.
நிறைய காதல், நிறைய உணர்வுகள் என கலவையான நிகழ்ச்சிதான் மம்மா மியா.
வெஸ்ட் என்ட் மியூசிக்கலின் இந்த இசை, நடன நிகழ்ச்சியை அப்படியே அதன் பெயரில் இந்தியமயமாக்கி தருகிறார்கள் வரலட்சுமி மற்றும் குழுவினர்.
இதுகுறித்து இயக்குநர் மித்ரன் தேவனேசன் கூறுகையில், எல்லாம் சரத்குமார் சார் மூலம் ஆரம்பித்தது. மம்மா மியாவைப் பார்த்து அசந்து போன அவர் அதை இந்திய வடிவத்தில் தர முடியுமா என்று ஜெப்ரி வார்டனை அணுகினார். இதையடுத்து வரலட்சுமியும் களத்தி்ல் இறங்கினார். இருவரும் இணைந்து இதற்காக ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியதும் மம்மா மியா உருவாக ஆரம்பித்தது என்றார்.
இந்த இசை, நடன நாடகத்தில் ஸ்வப்னா ஆப்ரகாம் டோனா கேரக்டரில் நடிக்கிறார். 3 தந்தைகளில் ஒருவராக அர்ஜூன் தாமஸ் நடிக்கிறார். கவிதை சோபி கேரக்டரில் வருகிறார்.
ஆளுக்கு ஒரு பாடலில் ஜெப்ரியும், வரலட்சுமியும் நடனமாடவுள்ளனர்.
கண்ணுக்கும், காதுக்கும் செமத்தியான விருந்தாக கருதப்படும் மம்மா மியா நாளையும், நாளை மறுநாளும் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறும்.
நாளை இரவு 7 மணிக்கும், ஜூலை 5ம் தேதி மாலை 3 மணி மற்றும் இரவு 7 மணிக்கும் மம்மா மியாவை ரசிக்கலாம். source-thatstamil. 
Last Updated on Friday, 03 July 2009 17:20
|
தினமும் ஒயின் குடித்தால் நீண்டநாள் வாழலாம்; ஆய்வில் புதிய தகவல்
Friday, 03 July 2009 12:15
minaa
நோயின்றி நீண்ட நாட்கள் வாழ உணவில் கட்டுப்பாடு அவசியம் என முந்தைய ஆய்வு தகவல்கள் தெரிவித்தன. அதன் மூலம் மூளையில் நோய்கள் ஏற்படாது. ஞாபக சக்தியில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. அளவான உணவை சாப்பிட்டால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். கேன்சர் நோய் ஏற்படாது என்று கூறப்பட்டது. தினமும் சாப்பிடும் போது மது அருந்தினால், குறிப்பாக ஒயின் குடித்தால் நோயின்றி நீண்ட நாள் வாழலாம் என தற்போதைய ஆய்வு தெரிவித்துள்ளது. அத்துடன் சிறிதளவு இறைச்சி மற்றும் இறைச்சி சம்பந்தப்பட்ட உணவு வகைகளை உணவுடன் சேர்த்து கொள்ள வேண்டும். அதே சமயம் அதிக அளவு காய்கறிகள், பழங்கள் மற்றும் கொட்டை வகை உணவுகள், ஆலில் எண்ணையையும் சேர்த்து சாப்பிட்டால் நோயின்றி வாழலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆய்வை லண்டனில் உள்ள பொது சுகாதார கல்வி நிறுவனம் நடத்தியது. 23 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது
Last Updated on Friday, 03 July 2009 17:22
10 Shortcut Keys for Yahoo Mail
Tuesday, 30 June 2009 16:58
administrator
Here are some keyboart shortcuts that will give you better experience with Yahoo Mail. | Command | Shorcut | | Check Mail | m | | New Mail | n | | Reply | r | | Reply All | a | | Forward Message | f | | Mark as Read | K | | Mark as Unread | Shift+k | | Next Message | Ctrl+. (Control key + Period) | | Previous Message | Ctrl+, (Control Key + comma) | | Close Message | Ctrl+\ or Ctrl+w
|
|
|